வவுனியாவில் நூதனமாக பணம் திருட முயன்றவர்கள் மடக்கிப்பிடிப்பு!!!

வவுனியா –  கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்மபவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற இருவர் தம்மை பிரபல தனியார் இலத்திரனியல் நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பொருட்கள் மலிவு விலையில் தருவதாக கூறி மக்களிடம் முற்பணம் பெற்று வந்துள்ளனர்.

குறித்த இருவர் மீதும்  சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அப் பகுதி மக்கள் அவர்களை மடக்கிக் பிடித்து, குறித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதுடன்  குறித்த நபர்களை பண்டாரிகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *