ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில்  சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்க விட­யங்கள் குறித்து  கேட்­ட­றிந்­து­கொண்டார்.

அத்­துடன்  இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல்,  பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள்  உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும்   வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும்  இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடியும் விரி­வாக  பேச்சு நடத்­தி­யுள்­ளனர்.

இத­னி­டையே கடந்த ஜனா­தி­பதி  தேர்­த­லின்­போது நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய  வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் உறு­தி­யுடன் இருப்­ப­தாக   அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க  இந்­திய பிர­த­ம­ரிடம்  எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற  ரவி கரு­ணா­நா­யக்க முத­லா­வது  வெ ளிநாட்டு விஜ­ய­மாக நேற்று முன்­தினம்  இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்தார்.    இதன்­போது நேற்று முன்­தினம் மாலை   இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடி   இந்­திய வெ ளியு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்    இந்­திய வெ ளியு­றவு செயலர்  ஜெய்­சங்கர் மற்றும்   இந்­திய நிதி­ய­மைச்சர்   அருண் ஜெட்லி ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இந்­திய தலை­வர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது   இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற சமூக பொரு­ளா­தார அர­சியல் கலா­சார உறவு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து   கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக   இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும்  அபி­வி­ருத்தி திட்­டங்கள்  மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான  முத­லீட்டு செயற்­பா­டுகள்  தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக  ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்­திய  வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜு­ட­னான சந்­திப்­பின்­போது   இலங்கை இந்­திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு தீர்வு காண்­பது தொடர்­பா­கவும்  விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில்  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு தொடர்பில்  புது­டில்­லி­யி­லி­ருந்து  வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க  கேச­ரிக்கு தகவல் தரு­கையில்

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான  சந்­திப்பு மிகவும் பய­னுள்­ள­தாக அமைந்­தது.   வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நான் முத­லா­வ­தாக இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தமை தொடர்பில்  தான் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக   இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி   என்­னிடம்  தெரி­வித்தார்.  அதே­போன்று என்னை   இந்­தி­யா­வுக்கு  அழைத்­த­மைக்­காக நான் அவ­ருக்கு நன்றி தெரி­வித்தேன்.

இந்த சந்­திப்­பின்­போது  இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான   பொரு­ளா­தார  அர­சியல் சமூக கலா­சார உறவு  தொடர்­பாக  விரி­வாக ஆரா­யப்­பட்­டது. இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை   அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்­ல­வேண்டும் என்­பது  தொடர்பில்    கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கடந்த இரண்டு வரு­டங்­களில்  இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உறவு  சிறந்த நெருக்க நிலையை அடைந்­துள்­ளது. அந்த நிலையை  மேலும் மேம்­ப­டுத்­த­வேண்டும் என  இதன்­போது  பேசப்­பட்­டது.  குறிப்­பாக   இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான  வர்த்­தக பொரு­ளா­தார உறவு  தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.    இலங்­கை­யி­லான முத­லீ­டுகள் குறித்து பேச்சு நடத்­தப்­பட்­டது.

இதே­வேளை இலங்­கையின் அர­சியல் நிலைமை   தொடர்­பா­கவும்   இந்­திய  பிர­தமர் மோடி என்­னிடம் கேட்­ட­றிந்­து­கொண்டார்.    இது சிறந்த சந்­திப்­பாக அமைந்­தது.

கேள்வி தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து பேசப்­பட்­டதா?

பதில் இலங்­கையில்   அர­சியல் நிலை­மைகள் குறித்து  இந்­திய பிர­தமர் கேட்­ட­றிந்­து­கொண்டார்.  அத்­துடன் அர­சியல் தீர்வு குறித்தும் அவர்  கலந்துரையாடினார். குறிப்பாக   உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய  அரசியலமைப்பு  தொடர்பாகவும்   இந்திய பிரதமர் என்னிடம் விடயங்களை கேட்டறிந்துகொண்டார். அவரிடம் நான் ஒரு விடயத்தை  தெ ளிவாக குறிப்பிட்டேன்.  அதாவது கடந்த  ஜனாதிபதி  தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய  வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக  இந்திய பிரதமரிடம் நான்   உறுதிபட தெரிவித்தேன் என்றார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *