ரஜினி, கமலை நம்பவேண்டிய அவசியமில்லை: பிரியா பவானி சங்கர்

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டதையடுத்ததே இருவரின் அரசியல் பயணம் குறித்து இவ்வாறு பேசி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌டயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலில் குதித்திருக்கும் அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் அவர்களை நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணித்தியாலத் திரைப்படம் அல்ல, அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த வி‌டயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன்” என்றார்.

மேலும் தெரிவிக்கையில், “நான் அவர்களுடைய படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment