யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 05 பேர் கைது

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரகாரர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (09) கைதுசெய்துள்ளனர்.

யாழ். நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், விசா காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment