மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் – கங்கனா ரனாவத்

பிரதமர் மோடியின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்தின் திரையீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் பேசுகையில், “பிரதமர் மோடி சிறு வயதில் மிகவும் கடினமாக சூழ்நிலைகளில் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது. நாம் தான் அவரை பிரதமர் தேர்ந்தெடுத்தோம்.

இந்த பதவியை யாராலும் பறிக்க முடியாது. இது அவருடைய கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நம் நாடானது தற்போது பள்ளத்தில் இருக்கிறது. இதிலிருந்து நாட்டை மீட்க 5 வருடங்கள் போதாது. இதை பள்ளத்திலிருந்து மீட்க மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்றார்.

SHARE OR SAVE THIS POST FOR LATER USAGE

Related posts

Leave a Comment