மோடியை இலங்கையில் தீத்து கட்ட நினைத்தது யார்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற சர்வதேச வெசாக் மாநாட்டுக்கு, முஸ்லிம் மதகுருவைப்போல வேடமிட்டு வருகைதந்து, மண்டபத்துக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைவதற்கு முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், நாளை (19) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை நாளை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பதில் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

மாளிகாவத்தை, கெத்தாராம வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அல்தான் மொஹமட் கலீமுல்லா என்றழைக்கப்படும் மொஹமட் மன்சூர் கலீல் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்த மாநாட்டில், மண்டபத்துக்குள் நுழைவதற்கு முயன்றுள்ளார்.

அங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மேற்படி நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் கூறிய பெயரும், கடவுச்சீட்டில் இருந்த பெயருக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருந்துள்ளது.

அந்த மாநாட்டை பார்வையிடுவதற்காக அழைக்கப்பட்டோருக்கான அழைப்பிதழும் சந்தேகநபர் வைத்திருந்துள்ளார். அதில், சந்தேகநபரின் பெயரானது கையெழுத்தில் எழுதப்பட்டிருந்துள்ளது. அத்துடன், விநியோகிக்கப்பட்டிருந்த அழைப்பிதழை விடவும், அவர் கொண்டுவந்திருந்த அழைப்பிதழ் 6 அங்குலம் நீளமானதாய் இருந்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் வைத்திருந்த கடவுச்சீட்டின் பிரகாரம், அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷிலிந்து நாடு கடத்தப்பட்டவர் என்றும், அவர் இலங்கையில் எந்தவொரு பள்ளிவாயிலிலும் முஸ்லிம் மதகுருவாக செயற்படுபவர் அல்லர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *