மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கதிரை ஐந்தரை லட்சம்!

மேல் மாகாண சபைக்கென புதிதாக அமைக்கப்பட்டுள்ள பத்தரமுல்ல டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள கட்டிடத்தில் ஒரு மாகாண சபை உறுப்பினர இருக்கை கதிரைக்கு ஐந்தரை லட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளமை குறித்து மேல் மாகாண சபை ஜேவிபி உறுப்பினர் லக்ஷமன் நிப்புணாராச்சி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

104 மாகாண சபை உறுப்பினர்களுக்கு இருக்கை கதிரை கொள்வனவு செய்ய விலைமனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் அனைவருக்கும் கதிரை கொள்வனவு செய்வது சிறந்தது என்றாலும் ஒரு கதிரைக்கு ஐந்தரை லட்சம் செலவு செய்வது அநியாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக விலையில் இவ்வாறு கதிரை கொள்வனவு செய்ய அனுமதி அளித்தது யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment