முன்னாள் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் : அர்ஜுன ரணதுங்க

தற்­போ­தைய கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணை­வ­தற்கு தாம் தயா­ரில்­லை­யென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலை­வரும் துறை­மு­கங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்­ச­ரு­மான அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணைந்­து­கொள்ள வேண்­டு­மென இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர் அசங்க குரு­சிங்க முன்­வைத்த கோரிக்­கைக்கு முதன் முறை­யாக பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார்.

உடு­கம்­ப­லவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் நிர்­வா­கத்தில் தலை­யி­டு­வதன் கார­ண­மாக அசங்க குரு­சிங்­க­வினால் தன்­னு­டைய கடமைகளை உரி­ய­மு­றையில் நிறை­வேற்­று­வ­தற்கு சந்­தர்ப்­பம்­கிட்­டா­தென தெரி­வித்தார்.

‘ கடந்த 20 ஆண்­டு­க­ளாக இந்­நாட்டில் என்ன நடந்­த­தென அசங்க குரு­சிங்க அறிந்­தி­ருக்­க­வில்லை. எவ்­வா­றான அர­சியல் தலை­யீ­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எவ்­வா­றான திருட்டுச் செயல்கள் இடம்­பெற்­றன. எவ்­வா­றான தவ­றி­ழைத்த நபர்கள் விளை­யாட்டில் ஈடுபட்­டார்கள் என அசங்க குரு­சிங்க அறிந்­தி­ருக்­க­வில்லை.

தற்­போ­தைய கிரிக்கெட் நிர்­வா­கிகள் தன்னுடைய கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு, குருசிங்கவிற்கு ஒருபோதும் இட­ம­ளிக்­க­மாட்­டார்கள். நிர்­வா­கத்தில் உள்­ள­வர்கள் அர­சியல் தலை­யீ­டு­களை மேற்­கொள்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய நண்­பர்­களின் பிள்­ளை­க­ளுக்கு விளை­யாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­கின்­றார்கள். அண்­மை­யிலும் இவ்­வா­றா­னதோர் சம்­பவம் பதி­வா­கி­யது.

இந்­ந­ட­வ­டிக்கை கார­ண­மாக கிரிக்கெட் நிர்­வா­கத்­திற்கு களங்கம் ஏற்­பட்­டுள்­ளது. தற் ­பொழுது முன்னாள் கிரிக்கெட் வீரர்­களை பயன்­ப­டுத்தி தங்­க­ளு­டைய சேறு­களை மறைக்க முயற்­சிக்கும் செயன்­மு­றை­யொன்று பின்­பற்­றப்­ப­டு­கின்­றது.

எனவே நான் மிகவும் பொறுப்­பு­ணர்­வுடன் கூற­வி­ரும்­பு­வது யாதெனில், முன்னாள் வீரர்­க­ளான அர­விந்த, அசங்க, சனத் ஆகிய அனை­வரும் கிரிக்கெட் விளை­யாட்டில் தவ­றொன்று இழைக்­கப்­ப­டு­மாயின் அத்­த­வறை சரி­செய்ய வேண்டும். இல்­லையேல் அதி­லி­ருந்து விலக வேண்­டு­மென்­ப­தையே நான் விசே­ட­மாக குறிப்­பி­டு­கின்றேன்.

உலகக் கிண்­ணத்தை வென்ற பலர் இன்று கிரிக்கெட் பயிற்சியாளர்களாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே எதிர் ­கா­லத்தில் எம்மாலும் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளலாம். அதன் பொருட்டே இவ்வீரர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள். இவ்வீரர்களுக் குரிய சந்தர்ப்பங்களை வழங்கி வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *