முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடுப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்ப்பில் டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டூ பெலஸிஸ் மற்றும் டீ கெக் ஆகியோர் தலா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய 6 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related posts

Leave a Comment