மீண்டும் குப்­பைகள் சரியும் அபாயம் : தேசிய கட்­டட ஆராய்ச்சி மையம் எச்­ச­ரிக்கை

(ஆர்.யசி)

Image result for மீதொட்­ட­முல்ல  virakesari

மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்டுப் பகு­தியில் மீண்டும் அபாயங்கள் ஏற்­படக் கூடிய வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் மழை பெய்யும் நிலையில் மீண்டும் குப்பைகள் சரிவு ஏற்­பட அதிக வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் தேசிய கட்­டட ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது.

மீதொட்­ட­முல்ல  குப்பை மேடு சரிந்து விழுந்­ததில் ஏற்­பட்ட அனர்த்தம் கார­ண­மாக இது­வ­ரையில்  31 பேர் உயிர் இழந்­துள்­ள­துடன் 11பேர் காணாமல் போயுள்ளனர். இந்­நி­லையில் குறித்த பகு­தியின் மீட்புப் பணி­களை   பாது­காப்பு படைகள் மேற்­கொண்டு வரும் நிலையில் தற்­போது மீண்டும்

இப்­ப­கு­தியில்   அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் காலங்­களில் மழை பெய்தால் மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டில் மீண்டும் சரிவு ஏற்­படும் எனவும் அதனால் மீண்டும் அனர்த்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில்  தேசிய கட்­டட ஆராய்ச்சி  மையத்தின்  மண் சரிவு ஆய்வு மற்றும் ஆபத்து தொடர்பில் ஆய்வு மேற்­கொள்ளும் நிபுணர்  ஆர்.டிம்.எஸ்.பண்­டார தெரி­விக்­கையில்,

இந்த அனர்த்தம் மிகப்­ப­ரிய தாக்­க­மாக கரு­தப்­பட வேண்டும்.  மக்கள் சற்றும் எதிர் பார்க்­காத நேரத்தில் இந்த விப­ரீதம் இடம்­பெற்­றுள்­ளது. உண்­மையில் குப்பை மேடு சரி­ய­வில்லை. குப்பை மேட்டின் பாரத்­தினால்  மண் மேடு உடைந்து அருகில் உள்ள வீடுகள் மீது  விழுந்­துள்­ளன. இங்கு குப்பை மேட்டை சுற்­றி­யுள்ள வீடுகள் ஒரு பக்கம் தள்­ளப்­பட்­டுள்­ள­துடன் மேல் பக்­க­மாக உயர்ந்­துள்­ளன. இந்த நிலை­மையை நாங்கள் மண் சரிவு அனர்த்­த­மா­கவே கருத வேண்டும்.  இவ்­வா­றான சம்­பவம் ஒன்று இலங்­கையில் இடம்­பெற்ற முதல் சந்­தர்ப்பம் இது­வாகும்.

மேலும் தற்­போ­தைக்கு குப்பை மேட்டில் குப்பை போடா­மை­யினால் ஆபத்­துக்கள் இல்லை. இங்கு கொட்­டப்­படும் குப்­பைகள் தடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் பாதிப்­புகள் இல்லை.  எனினும் எதிர்­வரும் நாட்­களில் மழை பெய்தால் குப்பை மேட்டில் மற்­று­மொரு அனர்த்தம் ஏற்­படக் கூடிய வாய்ப்­புகள் உள்­ளது.  இதனால் குப்பை மேட்­டினை சுற்றி ஆபத்­தான எல்­லை­யாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் அங்கு வசிப்­ப­வர்­களை அங்­கி­ருந்து செல்­லு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆபத்­தான பகு­தியில் கிட்­டத்­தட்ட 130 வீடுகள் உள்­ளன. ஆகவே இந்த பகுதி மக்­களை வெளி­யேற்றி தொடர்ந்தும் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும். அதேபோல் தற்காலிகமாக பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை கைவிட்டு நிரந்தரமாக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *