மியன்மாரில் மைக்ரோ பினான்ஸ் கம்பனி மூலம் தனது தடத்தை விரிவாக்கியுள்ள கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கி மியன்மாரில் அதன் இரண்டாவது கிளையாக நுண்நிதி (கைரோபினான்ஸ்) கம்பனி ஒன்றை திறந்துள்ளது. யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலகம் ஒன்றை திறந்து இரண்டு ஆண்டுகளில் இந்தக் கம்பனி திறக்கப்பட்டுள்ளது. இந்த முதலாவது அலுவலகமானது நிதி ஆலோசனை சேவைகள், வங்கிச் சேவைகள், நிதி பரிமாற்றம், பண கொடுக்கல் வாங்கல் சேவைகள் என்பனவற்றை அங்குள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.

வரையறுக்கப்பட்ட CBC மைக்ரோ பினான்ஸ் கம்பனி (CBC மியன்மார்) என்ற பெயரில் நே பிடாவ் எனும் இடத்தில் ஜுலை மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட புதிய கம்பனியின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா கொமர்ஷல் வங்கித் தலைவர் தர்மா தீரரத்ன தலைமையில் இடம்பெற்றது.

வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கம்பனி பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018ல் ஜனவரியில் இதற்கான அனுமதிப் பத்திரம் கிடைத்துள்ளது. மியன்மாரின் நிதி ஒழுங்கமைப்பு திணைக்களம் (FRD) ஆல் அனுமதிக்கப்பட்டுள்ள நுண்நிதிச் செயற்பாடுகளில் இந்நிறுவனம் ஈடுபடும்.

CBC மியன்மார் நிறுவனம் நுண் நிதி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு குழு ரீதியான கடன்களையும் தனியார் கடன்களையும் வழங்கும். சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அனுமதியோடு பொது மக்களிடம் இருந்து சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக் கொள்ளும் திட்டமும் உள்ளது.

கிராமீன் மற்றும் சமூக முன்னேற்றக் கழக (ASA) குழு ஆகியவற்றின் கடன் கொடுக்கும் முறைகளை உள்ளடக்கிய கலப்பு திட்டத்தைக் கொண்டதாக இதன் வர்த்தக மாதிரி அமைந்திருக்கும். இது மியன்மாரில் கடன் பெறுவோரின் தேவைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் உள்ளடக்கியதாகும் என்று கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. பிரமிட் பெறுனர்களின் அடிமட்டத்தில் இருந்து நிதித் தேவைகளுக்கான வசதிகளையும் CBC மியன்மார் ஊக்குவிக்கும். இது அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வலுவூட்டவும் வறுமையில் இருந்து முன்னேற்றம் காணவும் வழியமைக்கும். கம்பனி நுண் மற்றும் சிறிய வர்த்தக முயற்சியாளர்களிலும் கவனம் செலுத்தும். மியன்மாரில் இந்தப் பிரிவில் இதுவரை கவனம் செலுத்தப்படாத தேவைகள் நிறைய உள்ளன. இது ஒரு கன்னி நிதிச் சந்தையாகவே கருதப்படுகின்றது.

´மியன்மாரில் எமது செயற்பாடுகள் தொடர்பாக எம்மிடம் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது´ என்று துரைரட்ணம் கூறினார். ´மியன்மாரின் நிதித்துறை இன்னமும் அபிவிருத்தி அடைந்து வரும்; நிலையில் உள்ளது. நுண்நிதியில் இதுவரை கவனிக்கப்படாத கணிசமான பல தேவைகள் உள்ளன. இந்த நாடு அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து உதவிகளும் கிடைத்து வருகின்றன´ என்று அவர் மேலும் கூறினார்.

CBC மியன்மார் கடன்ரூபவ் சேமிப்பு, வர்த்தக மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி சேவைகள் என்பனவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. கட்டாயமான தன்னிச்சையான சேமிப்பு முறைகளை ஊக்குவித்து நுண் காப்புறுதி முன்னேற்றம் உட்பட அங்குள்ள நுண் நிதிச் சட்டங்களுக்கு இசைவாக சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய சேவைகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை மாதிரி பற்றி விளக்கமளித்த துரைரட்ணம் ´ஆரம்பம் முதல் CBC மியன்மார் மும்முனை அணுகு முறையை மேற்கொண்டு சமூக மற்றும் நிதிச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும். ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகப் பெறுமானங்களுக்கு இசைவாக கடன் வழங்கல் முறைமைகள் மேற்கொள்ளப்படும். உறுதியான பிரசார வாடிக்கையாளர் பாதுகாப்பு கொள்கைகள் (CPP) யை அமுல் செய்வதில் கம்பனி முழு அர்ப்பணிப்போடு பணியாற்றும். வர்த்தகத்தின் மையமாக வாடிககையாளர்களை திகழச் செய்வதில் கம்பனி கொண்டுள்ள அர்ப்பணத்தை வெளிப்டுத்தும் வகையில் இது அமைந்திருக்கும்´ என்றார்.

கம்பனியின் முக்கியமான முகாமைத்துவப் பதவிகள் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் நிறப்பப்பட்டுள்ளன. ஏனைய பதவிகள் உள்ளுர் வாசிகளால் பூரப்படுத்தப்பட உள்ளதாகவும் கம்பனி அறிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கு அடுத்த படியாக கொமர்ஷல் வங்கியின் இரண்டாவது கடல் கடந்த செயற்பாடாக மியன்மார் அமைந்துள்ளது. 2003 ஜுலையில் வங்கி இங்கு பிரவேசித்தது. பங்களாதேஷால் செயற்படுத்தப்பட்டு வந்த Credit Agricole Indosuez (CAI), நிறுவனத்தைப் பொறுப்பேற்றதன் மூலம் வங்கியின் முதலாவது கடல் கடந்த வங்கிச் செயற்பாடு பங்களாதேஷில் தொடங்கியது. இன்று பங்களாதேஷில் கொமர்ஷல் வங்கிக்கு 19 கிளைகள் உள்ளன. பினான்ஷியல் மிரர், சிறந்த செய்பாட்டுக்கான றொபின்டக்ஸ் வர்த்தக விருது, பங்களாதேஷில் சிறந்த வெளிநாட்டு வங்கிச் சேவைக்கான த பினான்ஷியல் நியுஸ் சேர்விஸ் (FNS) வர்த்தக விருது, ICMAB விருது, தேசிய சிறந்த கூட்டாண்மை விருது என பல விருதுகளை அது உள்ளுரில் வென்றுள்ளது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும்ரூபவ் 775 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது 2018ன் முதல் ஆறு மாத காலத்தில மட்டும்; 16 சர்வதேச விருதுகளையும் உள்ளுர் விருதுகளையும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment