மரண தண்டனைகள் ஏற்புடையவை அல்ல: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

மரண தண்டனைகள் ஏற்புடையவை அல்ல என்று கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து வத்திகான் நகரில் அவர் நேற்று (02) ஆற்றிய உரையில், ”மரண தண்டனை விதிப்பது என்பது அனுமதிக்கத் தகாத நடைமுறையாகும். மரண தண்டனை விதிப்பதன் மூலம் மனிதனின் அடிப்படை புனிதத் தன்மையும், சுய மரியாதையும் தாக்குதலுக்கு உள்ளாகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் எத்தகைய குற்றங்கள் புரிந்திருந்தாலும் அவரது வாழும் தகுதி குறைவதில்லை என்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உலக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கத்தோலிக்க தலைமையகம் பாடுபடும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

Related posts

Leave a Comment