மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் லீலை செய்துள்ள ஆசிரியர்..

அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது.

இங்கு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றது.

இங்கு சுமார் 140க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில் 90 சதிகிதம் பேர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் செங்கல்பட்டை சேர்ந்தவர்.

திண்டுக்கல்லில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி உள்ளார்.

இந்நிலையில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித்தருவதாக கூறி வீட்டிற்கு மாணவிகளை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்கச்செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த ஆசிரியரினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பயிற்சி பள்ளி முதல்வரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டினை தொடர்ந்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் புகார் கூறப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல் ஆசிரியர் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *