மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன்

இந்தியாவிலுள்ள அரச மருத்துவமனையினால் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படதாதால், தனது மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தந்தையும் மகனும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையும் மகனும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவசமாக வகன வசதி ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கணவனான ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.

அதற்கு, வாகன வசதி இல்லையென கூறிய வைத்தியசாலை நிர்வாகம் சொந்த பணத்தை செலவழித்து தனியார் வாகனத்தை வடகைக்கு அமர்த்தி சடலத்தை கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.

வெளியே வந்து விசாரித்த போது தனியார் வானத்திற்கு  2,500 ரூபா கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பண வசதி இல்லாததால் மனைவியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.

மகன் பப்பு மோட்டார் சைக்கிளைசெலுத்த, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.

குறித்த செயலை வீதியிசென்றவர்கள் அவதானித்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *