மட்டக்களப்பில் குளத்தில் நீராடச்சென்று காணாமற்போன இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கரடியனாறு, உறுகாமம் பகுதியில் குளத்தில் நீராடச்சென்று காணாமற்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த 16 வயதான தங்கராசா ஜெசுகரன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச்சென்றிருந்த போதே இவர் நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்தார்.

நீராடச் செல்லும் பொருட்டு, நண்பர்கள் நால்வர் பயணித்த தோனி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அனைவரும் நீரில் மூழகியுள்ளனர்.

இதன்போது, மூவர் காப்பாற்றப்பட்டதுடன் தங்கராசா ஜெசுகரன் காணாமற்போயிருந்தார்.

மீட்கப்பட்ட மூவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment