மகிந்த ராஜபக்ச பெயரில் சர்வதேச மயானம் ஒன்று மட்டும் இல்லை – அசாத் சாலி

கடந்த அரசாங்கம் அரச நிர்வாகத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் “மகிந்த ராஜபக்ச” என்றே இடப்பட்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்ற்ம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றிய, இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயரே சூட்டப்பட்டது.

தாமரை தடாகத்திற்கும் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டதுடன்.

விளையாட்டு மைதானம் ஒன்றை நிர்மாணித்தால் அதற்கும் மகிந்த ராஜபக்ச என்றே பெயர் சூட்டப்பட்டது.

காலி மைதானத்தின் பார்வையாளர் கூடத்தை நிர்மாணித்து அதற்கும் மகிந்த ராஜபக்ச என பெயரிட்டனர்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயரே சூட்டப்பட்டன.

மகிந்த ராஜபக்ச என்ற பெயரில் சர்வதேச மயானம் என்ற ஒன்று மட்டுமே இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கம் உதாவ என்ற வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து லட்சக்கணக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தார்.

எனினும், அவர் எந்வொரு திட்டத்திற்கும் தனது பெயரை சூட்டிக்கொள்ளவில்லை.

மாளிகாவத்தையில் 100 அடி வீதிக்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பெயரை சூட்டு வேண்டும் என்று பரிந்துரைத்த போது, அவர் அதனையும் நிகராகரித்தார். இப்படியான தலைவர்களும் இந்த நாட்டில் இருந்தனர்.

எனினும் கடனை வாங்கி, அபிவிருத்தித் திட்டங்களை செய்து அவற்றுக்கு தனது பெயரை சூட்டிக்கொண்ட ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment