பொலிஸ் உயரதிகாரி 20 பேருக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயரதிகாரி 20 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதி பொலிஸ்மா அதிபர் 06 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது. பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் 09 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, பொலிஸ் அத்தியட்சகர் மூவரும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment