பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக செய்துள்ள வசதிகள்

இப்பொழுது உலகில் அதிக மக்கள் தொகை கொண்டது பேஸ்புக் தான். சமூக வலைத்தளங்களின் அரசன் என்று கொண்டாடப்பட்டு வரும் பேஸ்புக், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிவிப்பு செய்துள்ள வசதிகள் என்னென்ன என்று தற்போது பார்ப்போம்.

புதிய ஆப்-கேமிரா (facebook app camera)

பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் புதிய எபெக்ட்டுகள் (effect) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆப் கேமிரா என்று கூறப்படும் இந்த வசதியின் மூலம் புகைப்படங்களுக்கு மாஸ்க், பிரேம் உள்பட பலவற்றை செய்து அழகூட்டலாம்.

பேஸ்புக் மெசெஞ்சர் (facebook massenger)

பேஸ்புக் மெசெஞ்சர் என்பது நமது நண்பர் அல்லது குழுவுடன் சேட் செய்ய உதவும் ஒரு ஆப் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த மெசெஞ்சரில் இதுவரை டெக்ஸ்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் குறிப்பாக மகிழ்ச்சி, காதல், கோபம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆப்சன்களும்(option) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுவிட்டரில் (twitter) இருக்கும் வசதி

பேஸ்புக்கிலும் டுவிட்டரில் நாம் தெரிவிக்க விரும்பும் ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் @ போட்டு அவருடைய டுவிட்டர் அக்கவுண்டை பதிவு செய்தால் நம்முடைய கருத்து சம்பந்தப்பட்டவருக்கு சென்றுவிடுவதோடு, அதை நோட்டிபிகேசனிலும் (Notification) காண்பிக்கும். இந்த வசதி தற்போது பேஸ்புக்கிலும் வந்துவிட்டது. இதனையும் பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இருக்கும் இடத்தை அறியும் வாய்ப்பு

கூகுளில் இருப்பதை போலவே பேஸ்புக்கிலும் லைவ் லொகேசனை (live location) அறியும் வசதி பேஸ்புக்கில் வந்துவிட்டது.

இந்த வசதியால் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றார்கள் என்பதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம். பேஸ்புக் மெசெஞ்சரில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *