பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

மியன்மார் இராணுவ அதிகாரிகள் சிலரின் கணக்குகளை சமூக வலைத்தளம் மற்றும் இன்ஸ்டகிராமிலிருந்து நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களின் பதிவுகளை ஆராய்ந்ததன் பின்னர், தவறானதும் வெறுப்பானதுமான தகவல்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக அவை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, சிரேஷ்ட இராணுவ ஜெனரல் மின் ஆங் லைங், இராணுவத் தலைமை கொமாண்டர் ஆகியோர் உள்ளிட்ட 20 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

18 பேஸ்புக் கணக்குகள், ஒரு இன்ஸ்டகிராம் கணக்கு மற்றும் 52 பேஸ்புக் பக்கங்கள் ஆகியவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment