பெண்ணைக் கொலை செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள்: விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண்ணொருவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 15 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிளினால் குறித்த பெண்ணை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 51 வயதான பெண் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபரினால் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டது.

Related posts

Leave a Comment