புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த வேண்டும்” : ஜனாதிபதி

சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிச் சான்றிதழ்களை வழங்கும்போது புதிய தொழில்நுட்ப முறைகளை அதன்பொருட்டு உபயோகிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரச்சினைகள் காணப்படும் செயற்திட்டங்களை இனங்கண்டு உரிய அரச நிறுவனங்களில் தனியான குழுக்களை நியமித்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களிற்கு அருகில் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *