பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த சங்காவிடம் சச்சின் கேட்டது என்ன ?

தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பிறந்ததின பரிசொன்றை சச்சின் கேட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கார் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்கார டுவிட்டரில் சச்சினுக்கு பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சங்காவின் பிறந்த தின வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து ரீடுவிட் செய்த சச்சின் சங்கவிடம் என்னை எப்போது மினிஸ்ரி ஒவ் ஹார்ப் ( Ministry of Crabs ) ற்கு அழைப்பீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள சங்கா “ நீங்கள் எப்போதும் வரலாம். நீங்கள் வரும் போது மரியாதையுடன் உபசரிக்கத் தயாராகவுள்ளேன்.“ என  பதிலளித்துள்ளார்.

கொழும்பு கோட்டை டச் ஹொஸ்பிடலில் சங்கா மற்றும் மஹேல ஆகியோர் இணைந்து நடத்தும் கடலுணவுக்கு பிரசித்திபெற்ற ரெஸ்ட்டூரண்டே மினிஸ்ரி ஒவ் ஹார்ப் ( Ministry of Crabs ) என்பது குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *