பிரதமர் ரணில் வியட்நாம் பயணம்

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 25 ஆம் திகதி வியட்நாம் செல்கின்றார். வியட்நாம் ஹெனோய் நகரில் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்து சமுத்திர மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் முதல் நாளன்று பிரதமர் விசேட உரையாற்றுவார். சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த இந்த வருடாந்த மாநாட்டில் பிராந்தியத்திலுள்ள நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பல உயர் மட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சென்ரா பெரேரா ஆகியோரும் வியட்நாம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment