பாரதியார் எழுதியது போல் இந்தியா மகாதேசமாக உருவெடுக்கும் – நரேந்திர மோடி

மகாகவி பாரதியார் எழுதியது போன்று இந்தியா மகாதேசமாக உருவெடுக்கும் என சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தடைகளையும் களைவது எப்படி என்பதையும் இந்தியா உலகிற்கு காட்டும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, செங்கோட்டையில் நாட்டின் மூவர்ணக் கொடியை மோடி 5ஆவது முறையாக ஏற்றி வைத்துள்ளார்.

இதேவேளை, Ayushman Bharat என்ற பெயரிலான மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் மோடியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறவுள்ளனர்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் முன்னெடுக்கப்படவுள்ள மனிதர்களை உள்ளடக்கிய விண்வௌித் திட்டம் தொடர்பிலும் மோடி இதன்போது அறிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment