பப்புவா நியூகினியாவில் எரிமலை சீற்றம்: 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

பப்புவா நியூகினியாவில் எரிமலை சீற்றத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக்க தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 9 ஆயிரம் மக்களை கொண்ட பப்புவா நியூகினாவின் மனம் தீவில் இன்று (சனிக்கிழமை) காலை எரிமலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வீடுகளையும், மரங்களையும் சாம்பல் மூடியுள்ளன. இதனால் அப்பகுதி சுவாசிக்க பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment