பந்துல எனது கருத்தை வேறு விதமாக கூறியுள்ளார்

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தான் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

தான் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை வேறு விதமாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்து வருவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்தால் தான் பதவி விலகுவதாக நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அவருடைய கருத்து தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கடந்த இரண்டரை மாதங்களுக்குள் 16 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை நேரடி முதலீடு செய்ய பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே தான் கருத்து தெரிவித்தாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் தெரிவித்த கருத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கவில்லை எனவும் அதனை வேறு விதமாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான அறிக்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொய்யான மற்றும் கேலிக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது வங்குரோத்து அரசியல் கட்சிகள் எனவும் அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leave a Comment