நுவரெலியா முன்னாள் மேயர் கமகே மஹிந்தகுமாரவிற்கு பிணை

நுவரெலியாவின் முன்னாள் மேயர் கமகே மஹிந்தகுமாரவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.

2013 ஆம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்திற்கான அனுசரணையாளரிடமிருந்து கிடைத்த 2,25,000 ரூபா நிதியை நகர சபை பொது நிதியத்தில் வைப்பிலிடாது, நகர மேயருக்கான நிதியத்தில் வைப்பிலிட்டமை குறித்தான வழக்கு தொடர்பில் முன்னாள் மேயருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்னாள் மேயருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

தனக்கெதிரான 14 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தாம் நிரபராதி என முன்னாள் நகர மேயர் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது, 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment