நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அவமதிப்பதற்கு சமன்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக பிக்குகள் வீதிகளில் இறங்க வேண்டும் எனவும், அரச நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இதன்மூலம் குறித்த தண்டனை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒன்று என்பதை அவர்கள் தெரிவிக்க முனைவதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கம் பிக்குகளை இலக்குவைத்து பழிவாங்குவதாக சில பிக்குகள் நேற்று தெரிவித்திருந்தனர். நாட்டிற்காகவும், சமயத்திற்காகவும் குரல் கொடுக்கும் பிக்குகளை இவ்வாறு ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, பிக்குகளை நீதிமன்றத்தின் ஊடாக இலக்குவைக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த டளஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டே ஞானசார தேரருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பை விமர்சிப்பதானது, நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக அரசியல்அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

Leave a Comment