நியோமால், லமாஹேவாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் 27 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment