நாட்டை பொறுப்பேற்கும் போது நிதியிருக்கவில்லை – பிரதமர் !

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்ததுடன் இதன்போது உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணம் வடக்குபோல் யுத்ததினால் பாதிக்கப்பட்டமையால் பொருளாதார ரிதியில் முன்னேற்ற வெறு பல திட்டங்கள் உள்ளதாகவும் ,இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாதகவும் பிரதமர் கூறினார்.
கிழக்கில் சுற்றுலா விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். அதனை ஆரம்பித்த பின்னர் சுற்றுலாத்துறையினால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் இதன் போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இவையனைத்தையும் செய்ய பாரிய நிதி வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர்,நாங்கள் நாட்டினை பொறுப்பேற்ற போது நிதியிருக்கவில்லைஅத்துடன் வட்டியைச் செலுத்துவதற்கு வருமானம் போதாமலுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Leave a Comment