நல்ல ஆட்சி நமது பிறப்புரிமை என்று சொல்லும் நேரம் இது

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் எனும் ரேடியோ நிகழ்சி மூலம் இந்திய நாட்டு மக்களிடம் இன்று (29) உரையாடினார்.

அப்போது, இந்தியாவில் ஆட்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நல்ல ஆட்சி நமது பிறப்புரிமை என்று சொல்லும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் சிறந்த ஆட்சியும், அதன் பலன்களும் கிடைக்க வேண்டும். அதன் மூலமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என மோடி குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர்களின் சாதனைகளை பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்களும் அவர்களது பங்களிப்பை வழங்குவதாக மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மோடி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment