நடிகர் விஜய் டுவிட்டர் ஹக் செய்யப்பட்டுவிட்டதா….?

நடிகர் சத்யராஜ் 9 வருடங்களுக்கு முன்னர் காவிரி விவகரத்தில் கன்னடர்காளுக்கு எதிராக பேசினார், அவர் மன்னிப்பு கேட்டால் தான் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடுவோம் என கன்னட அமைப்புகள் கங்கனம் கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் சத்யராஜ் விவகாரத்தில் கன்னடர்களுக்கு நடிகர் விஜய் டுவிட்டரில் கண்டனம் தெரிவிப்பது போன்று போட்டாஷாப் செய்த படத்தை நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவேற்றுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்ய வைரலாக பரவியுள்ளது இந்த போட்டோஷாப் பொய் படம்.

இந்த டுவீட் நடிகர் விஜய் பதிவிட்டது அல்ல போட்டோஷாப் செய்து பரப்பப்பட்ட விஷமத் தகவல் என்பதை ஆராயாத கன்னட தொலைக்காட்சிகள், இதனை நடிகர் விஜய் கூறியதாகவே செய்திகள் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

அந்த போட்டோஷாப் படத்தில் கன்னடர்களை எச்சரிக்கிறேன். சத்யராஜ் எனக்கு தந்தை போன்றவர். மன்னிப்புக்கு பதிலாக மண்ணை அள்ளி திண்ணுங்கள் என விஜய் கூறியுள்ளது போல் உள்ளது. ஆனால் நடிகர் விஜய் தனது 61-வது படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *