தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் தெரிவுக்கான வாக்களிப்பு நிறைவு

13 வாக்குகள் பெற்ற முன்னாள் உபவேந்தர் நாஜீம் முதலாமிடம்
இறுதி முடிவு ஜனாபதியினால் எடுக்கப்படும்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கான வாக்கெடுப்பில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் 13 வாக்குகள் பெற்று முதலாமிடத்துக்கு தெரிவானார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்கிசையில் உள்ள கல்வி வள நிலையத்தில் இன்று (28) பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி உமாகுமாரசாமி தலைமையில் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் 19 பேரவை உறுப்பினர் கலந்து கொண்டனர்.

அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் 11 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும் கலாநிதி ரஸ்மி ஆதம்பாவா 10 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இம்முறை உபவேந்தர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனைய 19 பேர் உபவேந்தர் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு மற்றும் தேர்வுக்காக 10 பேர் மாத்திரம் கலந்து கொண்டனர்.

உப வேந்தராக நியமிக்க பல்கலைக்கழக பேரவையினால் உயர் கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் சிபார்சு செய்து இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related posts

Leave a Comment