2 ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி,

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை தெரிவித்தார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட அனைவரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *