திண்மக் கழிவு முகாமைத்துவ தீர்வுகளை பன்முகப்படுத்தியுள்ள INSEE Ecocycle

INSEE Ecocycle நிறுவனத்தை தனியான நிறுவனமாக நிறுவியுள்ளதாக INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா அறிவித்துள்ளது. இதனை குறிக்கும் வகையில், ஜுலை 2 ஆம் திகதி கட்டுநாயக்க Ecocycle Pre- processing Facility (PPF) பகுதியில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், அன்றைய தினம் மாலைப் பொழுதில் புத்தளம் INSEE சீமெந்து ஆலையிலும் கொண்டாட்டங்களை முன்னெடுத்திருந்தது.

INSEE Ecocycle லங்கா, தனது பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எய்தியுள்ளது. நிறுவனம் தற்போது தனியான சட்டபூர்வமான அமைப்பை இயங்குவதுடன், INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகவும் அமைந்திருக்கும்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏக்கநாயக்க, Katunayaka ஏற்றுமதி பதப்படுத்தல் வலயத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டி. லோரன்ஸ் மற்றும் INSEE Ecocycle லங்கா பொது முகாமையாளர் சஞ்ஜீவ சூலகுமார ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், INSEE சீமெந்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அணி அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.

INSEE Ecocycle பொது முகாமையாளர் சஞ்ஜீவ சூலகுமார இந்நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையில், ´எமது தாய் நிறுவனமான தாய்லாந்தின் Siam City Cement PCL நிறுவனம், கழிவு முகாமைத்துவம் போன்ற சூழல்சார் சேவைகளை முன்னெடுப்பதில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளது. INSEE Ecocycle லங்காவைச் சேர்ந்த நாம் எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ச்சியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கிறோம். எமது வியாபார மாதிரியை நாம் தொடர்ச்சியாக பன்முகப்படுத்தி வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைய அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஏனெனில் வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு சுமூகமான மனநிலையை பேண பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் எமது செயற்பாடுகளை பன்முகப்படுத்தி வருகிறோம்´ என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´சகல தொழிற்துறைகளையும் வலுவூட்ட நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எதிர்கால நலன் கருதி திண்மக் கழிவு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் வலுவூட்ட நாம் முன்வந்துள்ளோம்´ என்றார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் INSEE Ecocycle தனது செயற்பாடுகளை சிறியளவில் ஆரம்பித்திருந்தது. தற்போது காணப்படுவதை போன்று, அக்கால கட்டத்தில் கழிவு முகாமைத்துவம் என்பது பாரிய கேள்வியை கொண்டிருக்கவில்லை. அக்காலப்பகுதியில் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை கொண்டிருக்காமை சாதாரண இலங்கையர்களுக்கு ஒரு பிரச்சினையாக அமைந்திருக்கவில்லை.

அக்காலத்தில் அகற்றப்பட வேண்டிய கழிவுகளில் பெருமளவு காணப்பட்டமை அரிசி/நெல் உமி மாத்திரமே காணப்பட்டன. முதலாவது கழிவு முகாமைத்துவத்தின் போதும் டயர்கள் மற்றும் நெல் உமி போன்றன பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிற்துறைசார் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை ஒரு வாடிக்கையாளருடன் Ecocycle ஆரம்பித்திருந்தது. இந்தப் பெறுமதி படிப்படியாக அதிகரித்திருந்தது. INSEE Ecocycle லங்கா தன்வசம் 500க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் பலர் பாரிய உள்நாட்டு நிறுவனங்களாக அமைந்துள்ளன. சுமார் 40% ஆனவை அரச திணைக்களங்கள ; என்பதுடன், முதலீட்டு சபை மற்றும் சுகாதார அமைச்சு போன்றனவும் அடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு Siam City சீமெந்து குழுமத்துடன் INSEE Ecocycle அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து நிறுவனம் படிப்படியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

நாட்டில் கழிவு முகாமைத்துவத்தில் போதியளவு கேள்வி காணப்படாத காலப்பகுதியில் Ecocycle வியாபாரத்தின் ஸ்தாபக தலைவர்கள் இந்தத் துறையில் பிரவேசித்திருந்ததுடன், முதலீடுகளை மேற்கொள்வதனூடாக அதிகளவு எதிர்பார்ப்புகளை கொண்டவர்களாக அவர்கள் திகழ்கின்றமையை உணர்த்தியுள்ளது.

INSEE Ecocycle பெருமளவில் தொழிற்துறைசார் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக நிறுவனங்களுக்கு தமது திண்மக் கழிவை சூழலுக்கு நட்பான வகையில் அகற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

Related posts

Leave a Comment