தலாவ வங்கிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

அனுராதபுரம் தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இருந்து ஒன்பது கோடி ரூபா பெறுமதியான ரொக்கப்பணமும், தங்க ஆபரணங்களும் சமீபத்தில் கொள்ளையிடப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் பவுண் பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும்.

களவு போன ஆபரணங்களுக்கு பதிலாக அவற்றை போன்ற ஆபரணங்களை செய்து தருமாறு சில வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த கோரிக்கை தொடர்பில் வங்கி முகாமைத்துவம் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம்

Related posts

Leave a Comment