தனுஷை நான் கிண்டல் செய்யவில்லை: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியுள்ள ஜுங்கா படத்தில் தனுஷை கிண்டல் செய்யவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ஜுங்கா படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நகைச்சுவை வில்லன் பற்றிய ‘பொயட்டு தினேஷ்’ என்ற கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். இது நடிகர் தனுசை கிண்டல் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விஜய் சேதுபதி, “நான் தனுசை கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுடன் தேவையுமில்லை. அப்படி எந்த உள்நோக்கமும் இல்லை.

தனுஷ் தன்னை நிரூபித்து தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தவர். அவர் மிக முக்கியமான நடிகர். தன்னை எல்லாத் தளங்களிலும் நிரூபித்த திறமைசாலி என்பதுடன், அவர் எனக்கு சீனியர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment