தங்கையருக்கு காய்ந்து காய்ந்து இருக்க நேரிட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்கள் குறித்து சிந்திப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (2) நடந்த ஜனபல சேனா என்ற பேரணியின் பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த இதனைத் தெரிவித்தார்.

தற்போது சிறியரக கார்களுக்கு வரியை அறிவிட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் கொள்கையைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தங்கள் குறித்து மட்டுமே சிந்திப்பதாகவும் மகிந்த குற்றஞ்சாட்டினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தம்மை திருடர் திருடர் எனக் குற்றச்சாட்டியதாகவும், தம்மீது வழக்குகளை தொடர முயற்சிப்பதாகவும், அரசியலமைப்பை அவர்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தப்பொதுக் கூட்டத்தில் சுமார் 1500 பேர் அளவில் கலந்துகொண்டிருந்தனர். வெளிமாவட்டங்களின் பல இடங்களில் இருந்து பேருந்துகள் வந்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Related posts

Leave a Comment