ஜெயலலிதாவின் கால்களை வெட்டியது யார் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகவும், அவர் அடக்கம் செய்யப்படும் போது கால்கள் இல்லாமல் தான் அடக்கம் செய்யப்பட்டார் என செய்திகள் பரவியது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள பொன்னையன் இந்த செய்தியை ஆமோதித்து பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க புறப்பட்டுவிட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டி தனது இந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார் அவர்.

நேற்று முன்தினம் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்னையன், ஜெயலலிதாவின் கால்களை வெட்டியதாக தகவல்கள் வருகின்றன. போயஸ் கார்டனில் பாதாள அறை ஒன்று உள்ளதாகவும், அதில் பணம் மற்றும் நகைகள் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய சசிகலா போயஸ் கார்டனின் ரகசிய அறையில் இருந்த அத்தனையையும் கண்டெய்னர் லாரிகள் மூலம் கடல் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் ரேகைகளுடன் பயோமெட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டிருந்ததாகவும், அதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகை வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தினகரன் தான் மூளையாக செயல்பட்டதாக அவர் கூறினார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *