ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சதி!

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படப் போகின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் சதியும் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – நெளும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ​மேலும், புதிய அரசமைப்பு தொடர்பில் தமக்கு இரகசியமான ஆவணம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment