சோமாலியாவில் இராணுவத் தளம் மீது தாக்குதல்: 27 வீரர் பலி

சோமாலியாவின் கிஸ்மயூ துறைமுக நகருக்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் அந்நாட்டின் 27 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை அங்குள்ள இராணுவத் தளத்தின் மீது தீவிரவாதிகள் மோதி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த இராணுவத்தளத்தினுள் நுளைந்த தீவிரவாதிகள் தளத்தைக் கைப்பற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது 27 படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

எனினும் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பினர் நடத்தியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதமும் இராணுவத் தளம் ஒன்றின் மீது குறித்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 படை வீரர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment