சேலை அவிழ்ந்து விழுவதைக்கூட பொருட்படுத்தாமல் வழக்கறிஞர் மீது தாக்கும் பெண் (காணொளி இணைப்பு)

பெண் வழக்கறிஞர் ஒருவர் மீது அயல் வீட்டுப்பெண்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று இணையத்தளத்தில் வைரலாக பரவிவருகின்றது.

இச் சம்பவம் இந்தியாவில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அரச காணியொன்றை ஆக்கிரமிப்புச் செய்த பெண் மீது தொடரப்பட்ட  வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பைபெற்று வெற்றிபெற்ற வழக்கறிஞரான அஞ்சு தேவியே அயல் வீட்டுப் பெண்களால் மூர்க்கத்தனமாக தடிகளாலும் கைகளாலும் தாக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞரான அஞ்சு தேவி அண்மையில் அரச காணி ஆக்கிரமிப்புக்காக தனது அயல்வீட்டு பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். குறித்த வழக்கில் வழக்கறிஞர் அஞ்சு தேவிக்கு டில்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பால் அயல் வீட்டுப்பெண்ணின் வீட்டுப் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அயல் வீட்டுப்பெண் தனது மகளுடன் இணைந்து வழக்கறிஞரான அஞ்சு தேவியை தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த பெண் வழக்கறிஞர் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் ஈடுபட்ட அயல் வீட்டுப்பெண் அணிந்திருந்த சேலை கழற்று விழவிழ  வழக்கறிஞர் மீது தாக்கும் காணொளி இணையத்தளமெங்கும் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *