செல்போன், டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவது தாமதமாகும்: நிபுணர்கள் எச்சரிக்கை

செல்போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவது காலதாமதமாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அன்றாட வாழ்வில் செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவற்றின் தாக்கம் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளிடம் உள்ளது. தற்போது சிறு குழந்தைகள் செல்போன்கள் மற்றும் டேப்லெட்களில் விளையாடி தங்களது பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவ்வாறு பொழுதை கழிக்கும் குழந்தைகள் பேசி பழகுவதில் கால தாமதம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் சான் பிரான் சிஸ் நகரில் குழந்தைகள் அகாடமிக் சங்கங்களின் கூட்டம் நடந்தது. அதில் நிபுணர்கள் புதிய ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

கனடாவில் டொரன் டோவை சேர்ந்த 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தினசரி 30 நிமிடத்துக்கு குறையாமல் செல் போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவதில் காலதாமதமாவது 49 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களிலேயே கவனம் முழுமையாக செயல்படுவதால் பேசும் ஆவல் குறைகிறது.

எனவே குழந்தைகள் அவற்றை அளவாக பயன்படுத்தும் வகையில் பெற்றோர் முறைப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *