செரீனா வில்லியம்ஸூக்கு வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ´நம்பர் வன்´ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அவுஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related posts

Leave a Comment