சுவாசிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள்

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக உள்விவகார பிரதியமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்து தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் போது, நாடு அனைத்து வழிகளையும், நெருக்கடியைச் சந்தித்திருந்ததாகக் கூறினார்.

தற்போது இந்த நெருக்கடிகளை நீக்கிக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நல்லாட்சி அசராங்கம் நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளை ஊடகங்கள் பேச மறந்துவருவதாகவும், ஊடகங்கள் இதுகுறித்து இன்னமும் பேச வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment