சீரற்ற காலநிலை; மேல் கொத்மலை உள்ளிட்ட வான்கதவுகள் திறப்பு

அதிக மழை காரணமாக, மேல் கொத்மலை மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அதன் 5 வான்கதவுக்ள திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள், இன்று (15) தன்னியக்க முறையில் திறக்கப்பட்டுள்ளதோடு, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில மட்டத்தில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், கெனியொன் (Canyon), நோர்ட்டன் பிரிடஜ், பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment