சிவகார்த்திகேயனின் ரெமோ பட விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்

தெலுங்கு சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தில் ராஜுவின் மனைவி அனிதா நேற்று (மார்ச் 11) மாலை உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பின் உயிரிழந்துள்ளார். தான் தயாரிக்கும் படத்தின் வேலைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த தில் ராஜு தற்போது இந்தியா திரும்ப இருக்கிறார்.

இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை தெலுங்கில் விநியோகம் செய்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் காற்று வெளியிடை படத்தை தெலுங்கில் செழியா என்ற பெயரில் விநியோகம் செய்ய இருக்கிறார்.

அனிதா அவர்களை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *