சிலியில் பிளாஸ்டிக் பை பாவனைக்கு தடை

தென் அமெரிக்க நாடான சிலியில் வர்த்தகச் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவால் இயற்றப்பட்டு காங்கிரஸால் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிளாஸ்டிக் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கு சிறிய கடைகளிற்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பெரியளவிலான வர்த்தக நிலையங்களிற்கு 6 மாத காலமே வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் இந்தச் சட்டத்தை மீறும் பட்சத்தில் 370 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த முதல் தென் அமெரிக்க நாடாக சிலி காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment