சிலாபத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

சிலாபம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) இரவு நள்ளிரவு முதல் இன்று (19) அதிகாலை வரை, 4 மணித்தியாலங்கள் வரை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா, மதுபானம் ஆகியவற்றை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment