சிறுவனின் போராட்டத்தால் வெற்றி

பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிட கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

பன்னிரெண்டு வயதான ஈரான் சிறுவன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் அவுஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு வழிவகுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஆயிரகணக்கான மக்கள் நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 119 சிறார்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய கடல் தடுப்புக் கொள்கை தரப்பு தனது கண்டனத்தை வௌியிட்டுள்ளது. நவ்ரு தீவுக்கான வசதிகள் நாட்டின் கடுமையான குடியேற்றக் கொள்கையின் கீழ் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment